தேசிய செய்திகள்

மராட்டியத்தின் அவுரங்காபாத்தில் முழு அடைப்பு; இன்று முதல் அமல்

மராட்டியத்தின் அவுரங்காபாத் மாவட்டத்தில் வாரவிடுமுறை நாட்களில் முழு அடைப்பு இன்று அமலுக்கு வந்தது.

தினத்தந்தி

அவுரங்காபாத்,

நாட்டில் கடந்த 2020ம் ஆண்டு முழுவதும் கொரோனா பாதிப்புகளால் மக்கள் அவதிப்பட்டனர். இதனால், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பின்னர் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன. சமீப நாட்களாக தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இவற்றில் மராட்டியம் அதிக பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இதனை முன்னிட்டு தடுப்பு நடவடிக்கைகளை முதல் மந்திரி உத்தவ் தாக்கரே தீவிரப்படுத்தி வருகிறார். இந்நிலையில், மராட்டியத்தின் அவுரங்காபாத் மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை 57,755 ஆக அதிகரித்து உள்ளது. 5,569 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மராட்டியத்தின் அவுரங்காபாத்தில் அதிகரித்து வரும் தொற்றால் வார விடுமுறை நாட்களில் முழு அடைப்பு அமல்படுத்துவது என அரசு முடிவு செய்தது. இதன்படி மராட்டியத்தின் அவுரங்காபாத் மாவட்டத்தில் முழு அடைப்பு இன்று அமலுக்கு வந்துள்ளது.

இதனை முன்னிட்டு அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. பொதுமக்களும் வீடுகளை விட்டு வெளியே வராமல் கூடியவரை தவிர்த்து வருகின்றனர். வாகன போக்குவரத்தும் முடங்கி காணப்படுகிறது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்