தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் காவல்துறை முகாம் மீது கையெறி குண்டு வீசி தாக்குதல்

ஜம்மு காஷ்மீரில் காவல்துறை முகாமை குறிவைத்து கையெறி குண்டு வீசி தாக்குதல் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் உள்ள காவல்துறை முகாம் மீது குண்டு வீசி தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் பொதுமக்களில் ஒருவர் காயம் அடைந்தார்.

இந்த சம்பவம் பற்றி அதிகாரிகள் கூறுகையில், சோபியான் பகுதியில் உள்ள சிறப்பு நடவடிக்கைகள் குழுவின் முகாமை குறிவைத்து கையெறி குண்டுகளை பயங்கரவாதிகள் வீசினர். ஆனால்,கையெறி குண்டு இலக்கு தவறி சாலை ஓரத்தில் விழுந்து வெடித்தது. இந்த விபத்தில் இஷ்பாக் ரஷித் என்பவர் படுகாயம் அடைந்தார். காயம் அடைந்தவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு