சண்டிகர்,
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. வைரஸ் பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமடைந்து வருகிறது. நாடு முழுவதும் இதுவரை 21 கோடியே 60 ஆயிரத்து 46 ஆயிரத்து 638 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அரியானா முதல்மந்திரி மனோகர் லால் கட்டார் கடந்த ஏப்ரல் 30 ந் தேதி கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக்கொண்டார்.
இந்நிலையில், அரியானா முதல்மந்திரி மனோகர் லால் கட்டார் கொரோனா தடுப்பூசியின் இரண்டாம் டோஸ் இன்று போட்டுக்கொண்டார். சண்டிகரில் உள்ள மருத்துவமனையில் தடுப்பூசியின் இரண்டாம் டோஸ் இன்று போட்டுக்கொண்டார்.