தேசிய செய்திகள்

அசாமில் 2 டோஸ் தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை

அசாமில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு நாளை முதல் செல்ல தடை விதிக்கப்படுகிறது.

தினத்தந்தி

கவுகாத்தி,

அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா கொரோனா சூழ்நிலை பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று கூறும்போது, அசாமில் முழு அளவில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் மாவட்ட நீதிமன்றங்கள், ஓட்டல்கள், சந்தைகள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு நாளை (ஞாயிற்று கிழமை) முதல் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது என கூறியுள்ளார்.

அசாமில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பதற்கான சூழ்நிலை இன்னும் ஏற்படவில்லை என உறுதிபட கூறியதுடன், எனினும், முக கவசம் அணிய வேண்டியது அவசியம் என்றும் கூறியுள்ளார்.

அசாமில் கடந்த 8ந்தேதியில் இருந்து இரவு ஊரடங்கு திருத்தி அமைக்கப்பட்டது. இதன்படி, இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 6 மணிவரை இரவு ஊரடங்கானது அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்