தேசிய செய்திகள்

தடுப்பூசி வழங்கும் திறன் இந்தியாவுக்கு உள்ளது; அறிவியல் தொழில்நுட்பத்துறை தகவல்

தடுப்பூசி வழங்கும் திறன் இந்தியாவுக்கு உள்ளது என அறிவியல் தொழில்நுட்பத்துறை தெரிவித்து உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சக வட்டமேஜை கருத்தரங்கில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை செயலாளர் அசுத்தோஷ் சர்மா பேசினார். அப்போது அவர் இந்தியாவின் கொரோனா தடுப்பூசிகள் முக்கியமான கட்ட பரிசோதனைகளில் இருப்பதாகவும், உலக மனித குலத்தின் மிகப்பெரும் பகுதிக்கு தடுப்பூசி வழங்கும் திறன் இந்தியாவுக்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், அறிவியல் தொழில்நுட்பத்துறையில் சர்வதேச ஒத்துழைப்புக்கு இந்தியா அதிகபட்ச முக்கியத்துவம் அளிக்கிறது. அந்தவகையில் இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உலகின் 40-க்கு மேற்பட்ட நாடுகளுடன் உள்ளது என்றும் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை தலைவர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்