தேசிய செய்திகள்

லகிம்பூர் கேரி, சிதாபூர் பகுதிகளில் இணைய தள சேவை முடக்கம்

வன்முறையில் பலியான விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற பிரியங்கா காந்தி, சிதாபூர் நகரில் தான் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

தினத்தந்தி

லக்னோ,

உத்தர பிரதேசத்தில் உள்ள லகிம்பூர் கேரி மாவட்டத்தில் நடைபெற்ற வன்முறையில் விவசாயிகள் உள்பட 9 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வன்முறையில் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற சென்ற பிரியங்கா காந்தி, சிதாபூரில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், லகிம்பூர் கேரி மற்றும் சிதாபூர் பகுதிகளில் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. இணைய சேவை முடக்கம் குறித்து மாவட்ட நிர்வாகம் தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணைய சேவை முடக்கப்பட்டு இருப்பதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதனிடையே, இன்று லகிம்பூர் கேரி மாவட்டம் வர திட்டமிட்டுள்ள ராகுல் காந்தி, சிதாபூர் சென்று தனது சகோதரி பிரியங்கா காந்தியையும் சந்திக்க உள்ளார். எனினும், ராகுல் காந்தி லகிம்பூர் கேரி வர மாநில அரசு அனுமதி அரசு அனுமதி மறுத்துள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்