தேசிய செய்திகள்

இரண்டு நாள் பயணமாக பஞ்சாப் செல்கிறார் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாபிற்கு இரண்டு நாள் பயணம் செல்கிறார். அதன் பின்பு அவர் பெரிய அறிவிப்புகளை வெளியிடுவார் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

டெல்லி

டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இரண்டு நாள் பஞ்சாப் சுற்றுப்பயணம் செல்கிறார். அவர் நாளை லூதியானா சென்று வணிகர்களை சந்திப்பார். அதன் பின்பு அரவிந்த் கெஜ்ரிவால் 30 -ந்தேதி அன்று செய்தியாளர்களை சந்திக்கிறார் என ஆம் ஆத்மி கட்சி அதன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

ஆம் ஆத்மியின் பஞ்சாப் இணை பொறுப்பாளர் ராகவ் சத்தாவும் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாபிற்கு இரண்டு நாள் பயணமாக, நாளை வருகிறார், பெரிய அறிவிப்புகளுக்காக காத்திருங்கள்" என டுவிட் செய்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்