தேசிய செய்திகள்

மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 209 புள்ளிகள் சரிவு

மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 207.99 புள்ளிகள் சரிந்து 60,403.75 புள்ளிகளாக இருந்தது.

தினத்தந்தி

மும்பை,

மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு சரிவை நோக்கி சென்றது. இதன்படி, காலை 9.50 மணி நிலவரப்படி 207.99 புள்ளிகள் வரை அல்லது 0.34 சதவீதம் அளவுக்கு சரிவடைந்து 60,403.75 புள்ளிகளாக இருந்தது.

இதேபோன்று, தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 52.45 புள்ளிகள் வரை அல்லது 0.29 சதவீதம் அளவுக்கு சரிவு கண்டு 18,000.95 புள்ளிகள் என்ற அளவில் இருந்தது.

எச்.டி.எப்.சி. நிறுவன பங்குகள் 1.66 சதவீதம் அளவுக்கு சரிந்து ரூ.2,634.35 என இருந்தது. எனினும், எச்.டி.எப்.சி. வங்கி பங்குகள் 2.58 சதவீதம் அளவுக்கு உயர்ந்து ரூ.1,613.65 ஆக இருந்தது. எச்.டி.எப்.சி. நிறுவனம் மற்றும் எச்.டி.எப்.சி. வங்கி இணைக்கப்படுகின்றன என நேற்று அறிவிக்கப்பட்டது.

இதற்காக கூடிய அவற்றின் வாரிய இயக்குனர்கள் கூட்டத்தில் எச்.டி.எப்.சி. நிறுவனம் மற்றும் எச்.டி.எப்.சி. வங்கி இணைப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்