தேசிய செய்திகள்

ரயில்களில் விற்கப்படும் டீ, காபி விலை உயர்கிறது !

ரயில்களில் விற்கப்படும் தேநீர், காபி ஆகியவற்றின் விலையை உயர்த்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

தினத்தந்தி

ரயில்களில் விற்கப்படும் தேநீர், காபி ஆகியவற்றின் விலையை உயர்த்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

தேநீர் பையுடன் கொடுக்கப்படும் 150 மி.லி. தேநீர் மற்றும் உடனடி காபி தூளுடன் கொடுக்கப்படும் காபி ஆகியவற்றின் விலையை ரூ.7-இல் இருந்து ரூ. 10- ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் ஏற்கனவே தயாரித்து வைத்த தேநீரின் விலை ரூ. 5 -ஆகவே நீடிக்கிறது. ரயில்வே உணவு ஒப்பந்த நிறுவனம் ஐஆர்சிடிசி இந்த விலை உயர்வு திட்டத்தை ரயில்வே நிர்வாகத்திடம் முன்வைத்தது. அந்த முன்மொழிவுக்கு ரயில்வே துறை ஒப்புதல் வழங்கியது.

இதற்கு முன்னர் பானைகளில் தேநீர், காபி அளித்து வந்த முறை நீக்கப்பட்டுவிட்டது. ஒரு முறை உயயோகிக்கும் குவளைகளை பயன்படுத்தி தேநீர் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விலை மாற்றத்திற்கு ஏற்ப உரிமத் தொகையை உயர்த்துமாறு அனைத்து மண்டலங்களையும் ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. சுமார் 350 ரயில்களில் ஐஆர்சிடிசி உணவகம் உள்ளது. ராஜஸ்தானி மற்றும் சதாப்தி விரைவு ரயில்களில் உணவுக்கு முன்கூட்டியே பணம் வசூலிக்கப்படுவதால் அந்த ரயில்களில் இந்த விலை உயர்வு இல்லை.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்