கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

மாநிலங்களின் கையிருப்பில் 4.87 கோடி தடுப்பூசி: மத்திய அரசு தகவல்

மாநிலங்களின் கையிருப்பில் 4.87 கோடி தடுப்பூசி உள்ளது என்றும், இதுவரை 63 கோடி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்க தடுப்பூசி போடும் பணிகளை மத்திய-மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இதற்காக உற்பத்தியாளர்களிடம் இருந்து தடுப்பூசியை மத்திய அரசே கொள்முதல் செய்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.

அந்தவகையில் இதுவரை 63.09 கோடி தடுப்பூசி வழங்கப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. இதில் நேற்றைய நிலவரப்படி 4.87 கோடி (4,87,39,946) தடுப்பூசிகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் கையிருப்பில் உள்ளதாகவும் அமைச்சகம் கூறியுள்ளது.

இன்னும் 21.76 லட்சம் (21,76,930) தடுப்பூசி டோஸ்கள் விரைவில் வழங்கப்படும் எனவும் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்