தேசிய செய்திகள்

நாடாளுமன்ற கூட்டம்: காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு கட்சி கொறடா உத்தரவு

நாடாளுமன்ற கூட்டம் தொடர்பாக, காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு கட்சி கொறடா உத்தரவிட்டுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு சபை ஒத்திவைக்கப்பட்ட பின்னர் இன்று (திங்கட்கிழமை) நாடாளுமன்றம் மீண்டும் கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் காங்கிரஸ் எம்.பி.க்கள் கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும் என அக்கட்சியின் தலைமை கொறடா ஜோதிர்ஆதித்ய சிந்தியா நேற்று அனைத்து எம்.பிக்களுக்கும் உத்தரவிட்டு உள்ளார்.

இதுதொடர்பாக அவர் பிறப்பித்த உத்தரவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மற்றும் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் ஆகியவை சபையில் நிறைவேற உள்ள சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று (திங்கட்கிழமை) முதல் 8-ந் தேதி வரை நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும். கட்சியின் மிக முக்கியமான நிகழ்வாக இந்த கூட்டத்தொடர் கருதப்படுகிறது. எனவே இதை மீறி சபையில் பங்கேற்காத உறுப்பினர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்