தேசிய செய்திகள்

பெட்ரோல் விலை குறைப்பு வெறும் கண் துடைப்பு - முதல்-மந்திரி மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

பெட்ரோல் விலை குறைப்பு வெறும் கண் துடைப்பு என்று முதல்-மந்திரி மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

தினத்தந்தி

கொல்கத்தா,

மத்திய அரசு நேற்று முன்தினம் பெட்ரோலிய பொருட்கள் மீதான கலால் வரியை குறைத்த நிலையில், பெட்ரோல் விலை ரூ.5-ம், டீசல் விலையில் ரூ.10-ம் குறைக்கப்பட்டது. இந்த நிலையில், மேற்கு வங்காளத்தில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், மேற்குவங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி அதை வெறும் கண் துடைப்பு என்று விமர்சனம் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் ஏற்கனவே விண்ணை தொட்டுவிட்ட பெட்ரோல் விலை நிலவரத்தில் இதை மத்திய அரசின் தீபாவளி பரிசு என்று கூறுவது மக்களை ஏமாற்றும் செயல்தானே தவிர வேறொன்றும் இல்லை. பெட்ரோலிய பொருட்களுக்கான கலால் வரி நிர்ணயத்தில் அடிப்படையான விலைக்குறைப்பு செய்வதே சரியான விலைக்குறைப்பு ஆகும்.

இதுபோன்ற விலைக்குறைப்பு அறிவிப்புகள் கண்துடைப்பு ஆகும் இதற்கிடையே மேற்கு வங்காள அரசு பெட்ரோலுக்கு ரூ.5.82-ம், டீசலுக்கு ரூ.11.77-ம் குறைத்து அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்