தேசிய செய்திகள்

விமான எரிபொருளைவிட பெட்ரோல்-டீசல் விலை உயர்வு - ராகுல் காந்தி கண்டனம்

விமான எரிபொருளைவிட பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நாடு முழுவதும் பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்தவகையில் விமானங்களுக்கான எரிபொருளான டர்பைனை விட வாகனங்களுக்கான இந்த எரிபொருள்களின் விலை அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இதை சுட்டிக்காட்டி மத்திய அரசை காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், மத்திய அரசு மிரட்டி வரி பறிப்பதாகவும், இந்த விவகாரம் ஒரு முக்கிய பிரச்சினை எனவும் குறிப்பிட்டு உள்ளார்.

மேலும், மோடியின் நண்பர்களின் நலனுக்காக ஏமாற்றப்படும் மக்களுடன் தான் இருப்பதாகவும், தொடர்ந்து குரல் எழுப்புவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

இபிஎப்ஓ சம்பள உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்கிறதா?

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்