தேசிய செய்திகள்

இந்தியாவில் முதன்முதலாக 5ஜி சேவை தொடக்கம்: புதுடெல்லியில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்!

பிரதமர் நரேந்திர மோடி 5ஜி சேவைகளை புதுடெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் தொடங்கி வைத்தார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

'இந்தியா மொபைல் காங்கிரஸ்-2022' மாநாட்டின் தொடக்க விழாவில், இன்று பிரதமர் நரேந்திர மோடி 5ஜி இணையத்தை முறைப்படி காலை 10 மணிக்கு தொடங்கி வைத்தார்.

இந்திய மொபைல் காங்கிரசின் 4 நாள் மாநாடு, புதுடெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் இந்திய மொபைல் காங்கிரஸில் 5ஜி தொடர்பான பிற தொழில்நுட்பங்களையும் பிரதமர் மோடி ஆய்வு செய்தார்.

நாட்டின் மூன்று பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள், இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியின் முன் 5ஜி இணையத்தின் மாதிரியை காண்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

5ஜி அடிப்படையிலான டிரோன்கள், கழிவுநீர் கண்காணிப்பு அமைப்புகள், சுகாதாரம் தொடர்பான தொழில்நுட்பம் மற்றும் இணைய பாதுகாப்பிற்கான செயற்கை நுண்ணறிவு சார்ந்த தளங்கள் மூலம் விவசாயத்தின் தொழில்நுட்பத்தையும் அவர் மேற்பார்வையிட்டார்.

முதலில், குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டும் 5ஜி சேவை அமலுக்கு வருகிறது. 2 ஆண்டுகளுக்குள் படிப்படியாக நாடு முழுவதும் அமலுக்கு வரும் என்று தெரிகிறது.4ஜி சேவையை விட பல மடங்கு வேகத்தில் வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய 5ஜி சேவை உதவும்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்