தேசிய செய்திகள்

11 கையெறி குண்டுகளுடன் வந்த பாகிஸ்தான் டிரோனை சுட்டு வீழ்த்தியது இந்திய பாதுகாப்பு படை

பாகிஸ்தானில் இருந்து 11 கையெறி குண்டுகளுடன் வந்த ட்ரோனை இந்திய பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியது.

தினத்தந்தி

குருதாஸ்பூர்,

பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் மாவட்ட எல்லைக்குள், 11 கையெறி குணடுகளுடன் பாகிஸ்தானிலிருந்து வந்த சிறிய ரக ட்ரோன் விமானத்தை பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது. டிரோனில் கொண்டு வரப்பட்ட 11 கையெறி குண்டுகளையும் பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர்.

இது குறித்து பாதுகாப்பு படை வட்டாரங்கள் கூறும் போது, கடந்த 19 ஆம் தேதி நள்ளிரவு பாகிஸ்தான் தரப்பில் இருந்து டிரோனில் வந்து கையெறி குண்டுகளை வீச முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இதனை அங்கு பணியில் இருந்த காவல்துறையினர் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் இணைந்து முறியடித்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்