தேசிய செய்திகள்

மோடி மீதான விசுவாசத்தை நிரூபிக்க என்னை விமர்சித்துள்ளீர்கள்: பாரிக்கருக்கு ராகுல் பதில் கடிதம்

மோடி மீதான விசுவாசத்தை நிரூபிக்க என்னை விமர்சித்துள்ளீர்கள் என பாரிக்கருக்கு ராகுல் பதில் கடிதம் எழுதியுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், கோவா மாநில முதல்-மந்திரியுமான மனோகர் பாரிக்கர் கணைய நோயால் அவதிப்பட்டு வருகிறார். இந்த நிலையில் கோவா சட்டசபை வளாகத்தில் உள்ள முதல்-மந்திரி அலுவலகத்தில், அவரை காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல் காந்தி நேற்று மதியம் சந்தித்து நலம் விசாரித்தார். இந்த சந்திப்பின்போது கோவா சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சந்திரகாந்த் காவ்லேகர் உடன் இருந்தார்.

பின்னர் இந்த சந்திப்பு குறித்து விளக்கம் அளித்த ராகுல் காந்தி, ரபேல் விவகாரத்தில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஒப்பந்தத்தில் தனக்கு எந்த பங்கும் இல்லை என்று மனோகர் பரிக்கர் கூறினார். கொச்சியில், தனது கட்சியினர் மத்தியில் உரையாற்றிய போது ராகுல் காந்தி இவ்வாறு கூறினார்.

இந்த நிலையில், ராகுல் காந்தி பொய் கூறுவதாக மனோகர் பாரிக்கர் விளக்கம் அளித்துள்ளார். ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியுள்ள மனோகர் பாரிக்கர் அதில் கூறியிருப்பதாவது:- உங்கள் அரசியல் ஆதாயத்திற்காக இந்த சந்திப்பை பயன்படுத்திக்கொண்டீர்கள் என்பதை நினைக்கும் போது நான் வருத்தம் அடைகிறேன். என்னை சந்தித்த 5 நிமிடங்களில் ரபேல் குறித்து உங்களுடன் எதுவும் பேசவில்லை என தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், மனோகர் பாரிக்கர் கடிதத்துக்கு பதில் எழுதியுள்ள ராகுல் காந்தி அதில் கூறியிருப்பதாவது:-

உங்களுடனான சந்திப்புத் தொடர்பாக எனக்கு நீங்கள் கடிதம் எழுதியிருந்தீர்கள். அந்தக் கடிதத்தால், துரதிருஷ்டவசமான மற்றும் தேவையில்லாத சர்ச்சை உருவாகிவிட்டது. உங்களின் நிலையை நான் புரிந்து கொண்டுள்ளேன். பிரதமரிடம் உங்களது விசுவாசத்தை நிரூபிக்க, முறையற்ற வகையில் என்னை விமர்சித்துள்ளீர்கள். உங்களுடனான சந்திப்பின்போது பேசிய விவரங்களை நான் வெளியிடவில்லை. உங்களுடனான சந்திப்புக்குப் பிறகு, 2 கூட்டங்களில் பேசியபோது நான் தெரிவித்த குற்றச்சாட்டுகள் அனைத்தும், ஏற்கெனவே வலைதளங்களில் இருக்கின்றன. அதை சுட்டிக்காட்டிதான், குற்றச்சாட்டுகளை தெரிவித்தேன் என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்