புதுடெல்லி,
2016 சட்டசபை தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அ.தி.மு.க.வை சேர்ந்த இன்பதுரை 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். இந்த வெற்றியை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் அப்பாவு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் கடந்த 4ந்தேதி மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. ராதாபுரம் தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் மற்றும் சர்ச்சைக்குரிய 19, 20, 21 ஆகிய 3 சுற்று வாக்குகள் மட்டும் மீண்டும் எண்ணப்பட்டன. மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வருகிற 23ந்தேதி வரை வெளியிட சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்திருந்தது.
இந்நிலையில், நவம்பர் 13 ஆம் தேதிவரை இடைக்காலத் தடையை நீட்டித்து சுப்ரீம் கோர்ட்டு இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும் ராதாபுரம் வழக்கு அன்றே விசாரிக்கப்படும் எனவும் சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது.