தேசிய செய்திகள்

'அக்னிபத்' திட்டத்துக்கு எதிராக ராஜஸ்தான் அரசு தீர்மானம் நிறைவேற்றம்

அக்னிபத் திட்டத்தை திரும்ப பெறக்கோரி ராஜஸ்தான் அரசு தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

ஜெய்ப்பூர்,

முப்படைக்கு ஆள்சேர்க்கும் புதிய திட்டமான அக்னிபத்தை மத்திய அரசு கடந்த 14-ந்தேதி அறிவித்தது. இதற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்து உள்ளன.

இந்த நிலையில் அக்னிபத் திட்டத்தை திரும்ப பெறக்கோரி ராஜஸ்தான் அரசு தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. முதல்-மந்திரி அசோக் கெலாட் தலைமையில் நேற்று நடந்த மந்திரி சபை கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேறியது.

இதுதொடர்பாக மாநில அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், 'இளைஞர்கள் மத்தியில் பெருத்த சந்தேகங்களை உருவாக்கியுள்ள இந்த திட்டம் தொடர்பாக நாடு முழுவதும் பெரும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன' என குறிப்பிடப்பட்டு இருந்தது. அக்னிபத் திட்டத்துக்கு எதிராக ராஜஸ்தானிலும் தீவிர போராட்டங்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்