தேசிய செய்திகள்

இந்தியாவில் சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடை ஏப்.30-வரை நீட்டிப்பு

இந்தியாவில் சர்வதேச விமானங்களுக்கான தடை ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

கொரோனா பரவல் காரணமாக பல மாதங்களாக சர்வதேச விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து படிப்படியாக உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டன. அதை தொடர்ந்து சர்வதேச பயணிகளுக்காக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், சர்வதேச விமானங்களுக்கான தடை ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, அதிகாரிகளால் ஒப்புதல் வழங்கப்பட்டு இயக்கப்படும் சர்வதேச விமானங்களுக்கு இது பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் சூழலில், ஏப்ரல் மாதத்திற்கான கொரோனா தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய அரசு இன்று வெளியிட்டது. இதைத்தொடர்ந்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சகமும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்