அம்ருதா பட்னாவிஸ் 
தேசிய செய்திகள்

100 ஆண்டுகளில் இல்லாத சிறப்பான பட்ஜெட்; டுவிட்டரில் கருத்து கூறி நெட்டிசன்களிடம் சிக்கிய அம்ருதா பட்னாவிஸ்

மத்திய பட்ஜெட் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சிறப்பானது என டுவிட்டரில் கருத்து கூறிய முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதாவை நெட்டிசன்கள் கேலி செய்தனர்.

100 ஆண்டுகளில் இல்லாத பட்ஜெட்

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமன் நேற்று முன்தினம் 2021-22-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து இருந்தார். மத்திய பட்ஜெட் குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்த முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா பட்னாவிஸ், கடந்த 100 ஆண்டுகளில் இந்தியாவில் இதுபோன்ற ஒரு பட்ஜெட்டை பார்த்தது இல்லை என கூறியிருந்தார். இந்தநிலையில் பட்ஜெட்டை பாராட்டும் வகையில் தெரிவிக்கப்பட்டு இருந்த அம்ருதாவின் கருத்து நெட்டிசன்களின் கேலிக்குள்ளானது. குறிப்பாக பெட்ரோல், டீசலுக்கு பட்ஜெட்டில் விதிக்கப்பட்ட கூடுதல் வரியால் கடுப்பில் இருந்த பலர் அதை புகழ்ந்த அம்ருதாவை வறுத்து எடுத்தனர்.

சுதந்திரம் பெற்று 74 ஆண்டுகள்

பலர் இந்தியா சுதந்திரம் பெற்றே 74 ஆண்டுகள் தான் ஆகிறது. அப்படி இருக்கையில் 100 ஆண்டுகளில் இல்லாத சிறப்பான பட்ஜெட் எப்படி தாக்கல் செய்யப்பட்டு இருக்க முடியும் என அம்ருதாவை டிரோல் செய்தனர். இதுகுறித்து அனுஜ் ஏக்நாத் என்பவர், "நீங்கள் உண்மையில் இந்தியர் தானா?" என கேள்வி எழுப்பினார்.

இதேபோல சமாதான் ஜெக்தாப் என்பவர், ஒருவேளை நமக்கு வரலாறு தவறாக கற்றுக்கொடுக்கப்பட்டு விட்டது போல, நீங்கள் சரியாக கூறியிருக்கிறீர்கள். வாருங்கள் பட்ஜெட்டை பற்றி ஒரு பாடல் பாடலாம் என கூறியிருந்தார்.

அம்ருதா அடிக்கடி சமூகவலைதளங்களில் அவரது பாடல்களை வெளியிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் சுமார் 4 மணி நேர நெட்டிசன்களின் கேலிக்கு பிறகு அம்ருதா, 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சிறப்பான பட்ஜெட் என்பதை குறிக்கும் வகையில் நிர்மலா சீத்தாராமன் பேசியதன் லிங்கை டுவிட்டரில் பகிர்ந்தார்.

இபிஎப்ஓ சம்பள உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்கிறதா?

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்