தேசிய செய்திகள்

கோர்ட்டில் இப்போதைக்கு தீர்வு வராது ‘ராமர் கோவில் கட்ட சட்டம் இயற்றுங்கள்’ - விசுவ இந்து பரிஷத் வலியுறுத்தல்

கோர்ட்டில் இப்போதைக்கு தீர்வு வராது எனவே ராமர் கோவில் கட்ட சட்டம் இயற்றுங்கள் என விசுவ இந்து பரிஷத் வலியுறுத்தி உள்ளது.

தினத்தந்தி

இந்தூர்,

விசுவ இந்து பரிஷத் சர்வதேச தலைவரும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான விஷ்ணு சதாசிவ கோக்ஜே, மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

சுப்ரீம் கோர்ட்டில் உள்ள அயோத்தி வழக்கு, நீண்டு கொண்டே செல்லும் என்று கருதுகிறோம். இப்போதைக்கு தீர்வு ஏற்படாது. மத நம்பிக்கைகள், கோர்ட்டின் ஆய்வுக்கு உட்பட்டது அல்ல. ராமர் அயோத்தியில் பிறந்தாரா? இல்லையா? என்பதை கோர்ட்டு தீர்மானிக்க முடியாது.

எனவேதான், அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்ட மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே வலியுறுத்தி வருகிறோம். காங்கிரஸ் கட்சியின் ஓட்டு வங்கி அரசியல்தான் ராமர் கோவில் கட்ட முட்டுக்கட்டையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்