தேசிய செய்திகள்

மேற்கு வங்காளத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை முதல் கோடை விடுமுறை; அரசு முடிவு

மேற்கு வங்காளத்தில் நாளை முதல் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அறிவிக்க அரசு முடிவு செய்துள்ளது.

தினத்தந்தி

கொல்கத்தா,

294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு கடந்த மார்ச் 27ந்தேதி தொடங்கி இந்த மாதம் 29ந்தேதி வரை 8 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. இதுவரை 5 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. 6வது கட்ட தேர்தல் வருகிற 22ந்தேதி நடைபெற உள்ளது. மே 2ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இந்நிலையில், முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று கூறும்பொழுது, மேற்கு வங்காளத்தில் நாளை முதல் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறையை தொடங்க முடிவு செய்துள்ளோம். ஜூன் வரை இந்த விடுமுறை இருக்கும் என கூறியுள்ளார்.

கொரோனா பாதிப்புகளை எதிர்கொள்வது பற்றி அவர் பேசும்பொழுது, இரவு ஊரடங்கு ஒரு தீர்வாக இருக்காது. நாம் தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பயப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று கூறியுள்ளார்.

இதேபோன்று மேற்கு வங்காளத்தில் கொரோனா தொற்றுகள் அதிகரித்து வரும் சூழலில் அதனை எதிர்கொள்ள மருத்துவமனைகளில் 20% படுக்கைகளை அதிகரித்து உள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்