தேசிய செய்திகள்

ஆன்லைன் டிக்கெட்டுகளுக்கு சேவை கட்டணம் குறைகிறது - ரெயில்வே அறிவிப்பு

‘பீம்’ செயலி மூலம் எடுக்கப்படும் ஆன்லைன் டிக்கெட்டுகளுக்கு சேவை கட்டணம் குறைக்கப்பட உள்ளதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

ரெயில்வே துறையின் வணிக அமைப்பான ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் முன்பதிவு செய்யப்படும் ரெயில் டிக்கெட்டுகளுக்கு கடந்த 1-ந் தேதி முதல் சேவை கட்டணம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி ஏ.சி. இல்லாத டிக்கெட்டுகளுக்கு ரூ.15-ம், ஏ.சி. வகுப்புகளுக்கு ரூ.30-ம் சேவை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இதனால் ஆன்லைன் ரெயில் டிக்கெட்டுகளின் விலை உயர்ந்துள்ளது. இது பயணிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் இந்த சேவை கட்டணத்தில் 25 சதவீதம் குறைக்க ரெயில்வேத்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி ஏ.சி. இல்லாத டிக்கெட்டுகளுக்கான சேவை கட்டணம் ரூ.10 ஆக குறைகிறது. இதைப்போல ஏ.சி. மற்றும் முதல் வகுப்பு பெட்டிகளுக்கு ரூ.20 ஆக குறைக்கப்படுகிறது.

இந்த கட்டண குறைப்பு, பீம் அல்லது யு.பி.ஐ. செயலிகள் மூலம் எடுக்கப்படும் டிக்கெட்டுகளுக்கு வழங்கப்படும் என ரெயில்வேத்துறை அறிவித்து உள்ளது. இந்த கட்டண குறைப்பு நவம்பர் 1-ந் தேதி முதல் அமலாகிறது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்