புதுடெல்லி,
டெல்லியில் இந்திரா காந்தி மைதானத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய மாநாடு 3 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த மாநாடு நேற்று தொடங்கியது. இன்று 2-வது நாளாக நடைபெற்று வரும் இந்த மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில்,
நாட்டில் உள்ள அனைவரையும் ஒன்றாக இணைப்பதே காங்கிரஸின் ஒரே நோக்கம். கை சின்னம் ஒன்றே, அனைவரையும் ஒன்றிணைத்து முன்னெடுத்து செல்லும். ஆட்சியாளர்களால் நாட்டு மக்கள் துண்டாடப்படுகிறார்கள்.
நாட்டு மக்களிடையே வெறுப்பு உணர்வை ஆட்சியில் இருப்பவர்கள் பரப்பி வருகின்றனர். நாட்டில் ஒற்றுமையை ஏற்படுத்துவதும் நமது கடமை. நாடு அனைவருக்கும் சொந்தமானது. மக்களின் நன்மைக்காகவே காங்கிரஸ் பாடுபடும்.
மக்களின் கோபத்தை பாஜக பயன்படுத்துகையில் காங்கிரஸ் அன்பை பயன்படுத்திகிறது.கட்சியின் மூத்த, இளம் தலைவர்களை இணைக்கும் பணியை மேற்கொள்ள உள்ளேன்.
முன்னேற விரும்பும் நாட்டுக்கும் வழிகாட்ட காங்கிரசால் மட்டுமே முடியும் என ராகுல் காந்தி கூறினார்.