தேசிய செய்திகள்

துணிவிருந்தால் எனது அரசை கவிழ்த்து பாருங்கள்- பாஜகவுக்கு உத்தவ் தாக்கரே சவால்

பீகாருக்கு தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்றால், பிற மாநில மக்கள் பணம் செலுத்த வேண்டுமா? எனவும் பாஜக தேர்தல் அறிக்கையை உத்தவ் தாக்கரே சாடினார்.

தினத்தந்தி

மும்பை,

சிவசேனா கட்சியின் சார்பில் தசரா பேரணி மும்பை தாதர் பகுதியில் சிறிய அரங்கில் நேற்று நடந்தது. கொரோனா வைரஸ் காரணமாக மிகப்பெரிய அளவில் சிவாஜி பார்க்கில் திறந்த வெளியில் நடத்தப்படாமல் சிறிய அளவிலேயே நடத்தப்பட்டது. இந்த தசரா பேரணியில் சிவசேனா தலைவரும், மாநில முதல்வருமான உத்தவ் தாக்கரே பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது: எனது அரசு பொறுப்பேற்று ஒரு ஆண்டுகள் ஆகிவிட்டது. நான் முதல் அமைச்சராக பொறுப்பேற்ற போது இந்த அரசு விரைவில் கவிழ்ந்து விடும் எனக்கூறினர். நான் அவர்களுக்கு சவால் விடுக்கிறேன். துணிவிருந்தால் எனது அரசை கவிழ்த்து பாருங்கள்.

முன்பெல்லாம், மாற்றுக் காரணி ஏதும் இல்லை (மோடிக்கு மாற்று) என்ற சூழல் இருந்தது. ஆனால், இப்போது உங்களைத் தவிர்த்து வேறு யார் வேண்டுமாலும் செய்வார்கள் என்று மக்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள் என்றார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்