தேசிய செய்திகள்

தனி விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டார், அதிபர் டிரம்ப்

டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அதிபர் டொனால்டு டிரம்ப் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இரண்டு நாள் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். குறிப்பாக அகமதாபாத்தில் நடைபெற்ற 'நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி மற்றும் சபர்மதி ஆசிரமம், தாஜ்மஹால் ஆகிய இடங்களில் நேற்று கலந்துகொண்ட அமெரிக்க அதிபர் இன்று இந்திய பிரதமர் மோடியுடன் முக்கிய பேச்சுவார்த்தைகள் நடத்தினார்.

பின்னர் இன்று மாலை ஜனாதிபதி மாளிகைக்கு வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், அவரது மனைவி மெலனியா ஆகியோரை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வரவேற்றார். இரவு அமெரிக்க அதிபருக்கு ஜனாதிபதி மாளிகையில் விருந்து அளிக்கப்பட்டது.

இந்நிலையில் தனது 36 மணிநேர சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த அதிபர் டொனால்டு டிரம்ப், தனது மனைவி மெலனியா, மகள் இவாங்கா, மருமகன் ஜோட் குஷ்னருடன் தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்