தேசிய செய்திகள்

இந்தியாவுக்கு உலக வங்கி ரூ.7,500 கோடி கொரோனா நிதி

இந்தியாவுக்கு உலக வங்கி ரூ.7,500 கோடி கொரோனா நிதி அளிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு சமூக உதவியை வழங்குவதற்காக கோவிட்-19 சமூக பாதுகாப்பு பதிலளிப்பு திட்டத்தின்கீழ் உலக வங்கி, இந்தியாவுக்கு 1 பில்லியன் டாலர் (சுமார் ரூ.7,500 கோடி) நிதி உதவி அளிக்கிறது. இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டு விட்டது.

இதன்மூலம் இந்தியாவுக்கு உலக வங்கி வழங்கும் கொரோனா வைரஸ் தடுப்பு ஆதரவு நிதி 2 பில்லியன் டாலர் ஆக (ரூ.15 ஆயிரம் கோடி) அதிகரித்துள்ளது.

ஏற்கனவே கடந்த மாதம் 1 பில்லியன் டாலர் உதவியை உலக வங்கி அறிவித்தது நினைவுகூரத்தக்கது.

இபிஎப்ஓ சம்பள உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்கிறதா?

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்