செய்திகள்

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்- முதல்-அமைச்சர் பழனிசாமி

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என முதல்-அமைச்சர் பழனிசாமி கூறினார்.

தினத்தந்தி

சென்னை

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கக் குட்டிகளுக்கு பிரதீப், தட்சிணா, நிரஞ்சனா என பெயர் சூட்டினார் முதலமைச்சர் பழனிசாமி.

பூங்காவில் உள்ள புலி குட்டிகளுக்கு வெண்மதி, யுகா, மித்ரன், ரித்விக் என பெயர் சூட்டினார் முதலமைச்சர்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூரியதாவது:-

வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதாகவே கருதுகிறோம். ஸ்டாலின் கூறும் போது லட்சகணக்கான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று கூறினார். ஆனால் சில ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றுள்ளார்கள். அதனால் இது எங்களுக்கு வெற்றியாகவே கருதுகிறோம். வேலூர் மக்களவை தேர்தலில் 6 சட்டமன்றங்களில் அதிமுக கணிசமான வாக்குகளை வாங்கி உள்ளது. தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்.

கிருஷ்ணா நதியில் 8 டி.எம்.சி தண்ணீரை திறந்துவிட ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி இசைவு தெரிவித்துள்ளார்.சிறுபான்மை பெரும்பான்மை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. மதம் ஜாதி அடிப்படையில் ஆட்சி செய்யவில்லை.

நீலகிரி மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் அரசு சார்பில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது என கூறினார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்