சென்னை:
தமிழகத்தில் வருவாயை பெருக்குவதற்காக, பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை உயர்த்தி, தமிழக அரசு, உத்தரவு பிறப்பித்தது. இதன்படி, பெட்ரோல் மீதான மதிப்பு கூட்டு வரி, 28லிருந்து, 34 சதவீதமாகவும், டீசல் மீதான வரி, 20லிருந்து, 25 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டது. அதனால், பெட்ரோல் விலை லிட்டருக்கு, 3.26 ரூபாயும், டீசல் விலை, 2.51 ரூபாயும் உயர்ந்தது. இந்த விலை உயர்வு, மே 4 முதல் அமலுக்கு வந்தது.
இந்நிலையில், இன்று பெட்ரோல் 43 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு 79.96 ரூபாயாகவும், டீசல் 51 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு 72.69 ரூபாயாகவும் உள்ளது. இந்த விலை உயர்வு இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.