சிறப்புக் கட்டுரைகள்

மெர்சிடஸ் ஜி.எல்.ஏ. அறிமுகம்

சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் தற்போது ஜி.எல்.ஏ. மாடலை அறிமுகம் செய்துள்ளது.

தினத்தந்தி

இதன் விற்பனையக விலை சுமார் ரூ.42.10 லட்சம். இதில் பிரீமியம் மாடலான ஜி.எல்.ஏ. 200 விலை சுமார் ரூ.57.30 லட்சம். இந்த ஆண்டு தொடக் கத்திலேயே இந்த மாடலை அறிமுகம் செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டிருந்தது. கொரோனா பரவல் காரணமாக தள்ளிப் போடப்பட்டது. ஜி.எல்.ஏ. மாடல் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினையும், டீசல் மாடல் 2 லிட்டர் டர்போ என்ஜினையும் கொண்டிருக்கும். இதில் 4 வேரியன்ட்கள் உள்ளன.

முழுவதும் உதிரி பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு இங்கு அசெம்பிள் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் மாடல் 163 ஹெச்.பி. திறன் 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழு விசையைக் கொண்ட தாகவும், டியூயல் கிளட்ச் வசதியோடு 7 கியர்களைக் கொண்டதாகவும் இருக்கும். டீசல் மாடல் 190 ஹெச்.பி. திறன் 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையைக் கொண்டிருக்கும். இதில் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் உள்ளது.

இந்த மாடலுக்கு ஒருங்கிணைந்த 3 ஆண்டு உத்திரவாதம் அளிக்கப்படுவதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மாடலுக்கு பி.எம்.டபிள்யூ.எக்ஸ் 1, வோல்வோ எக்ஸ்.சி 40, மினி கன்ட்ரிமேன் ஆகியன போட்டியாக இருக்கும் என தெரிகிறது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்