மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் மி.வி. நிறுவனம் புதிதாக கமாண்டோ இஸட்7 என்ற பெயரில் புதிய வயர்லெஸ் இயர்போனை அறிமுகம் செய்துள்ளது. சுற்றுப்புற இரைச்சலைத் தவிர்க்கும் (இ.என்.சி.) நுட்பம், இரண்டு மைக்ரோ போன் கொண்டது. 50 மணி நேரம் தொடர்ந்து செயல்படும் திறனுடையது. புளூடூத் 5.3 இணைப்பு வசதி கொண்டது. இரண்டு வண்ணங்களில் ஆர்.ஜி.பி. விளக்கொளி வசதியுடன், வெள்ளை, கருப்பு, நீல நிறங்களில் வந்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.999.