தமிழக செய்திகள்

சென்னை புறநகரில் 2 லாரிகள் கவிழ்ந்து விபத்து - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்கள்

மணிமங்கலம் அருகே லாரிகள் ஒன்றன் பின் ஒன்றாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஓட்டுநர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

தினத்தந்தி

காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே வண்டலூர்-வாலாஜாபாத் சாலை வழியாக 2 லாரிகள் ஜல்லிக்கற்களுடன் அதிக பாரத்தை ஏற்றிக் கொண்டு ஒன்றின் பின் ஒன்றாக சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த லாரி திடீரென முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியது.

இதனால் 2 லாரிகளும் ரோட்டில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. ஜல்லிக்கற்கள் சாலையில் சிதறியதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதே சமயம் லாரி ஓட்டுநர்கள் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்