சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் தொடங்கியது. இந்தஆலோசனை கூட்டத்தில் 33 அமைச்சாகளும் பங்கேற்றுள்ளனா.
இந்த அமைச்சரவை கூட்டத்தில் ஆறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதன் விவரம் பினவருமாறு:-
* ஊரடங்கு முழுமையாக அமல்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும். ஆக்சிஜன் முறையாக பயன்படுத்துவதை உறுதி செய்யவேண்டும்.
* தமிழகத்தில் எந்த சூழ்நிலையிலும் ஆக்சிஜன் வீணாகக்கூடாது. கொரோனா நோயாளிகளுக்கு உடனியாக சிகிச்சை அளிப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
* ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும். ரெம்டெசிவிர் மருந்தை மக்களுக்கு தட்டுப்பாடு இன்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
* ஊரடங்கை சரியாக நடைமுறைப்படுத்தினால் மட்டுமே கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும்.
*கொரோனா தடுப்பூசி பயன்பாட்டை அதிகரிக்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
* கொரோனா பரவலை கட்டுப்படுத்த மருத்துவத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, நகர்ப்புற வளர்ச்சித் துறை இணைந்து செயல்பட வேண்டும் என்ற முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.