தமிழக செய்திகள்

கஞ்சா விற்ற 8 பேர் கைது

திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் கஞ்சா விற்ற 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் அதிகளவில் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸ் சூப்பிரண்டுக்கு பல்வேறு புகார்கள் சென்றன. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன், கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி திருப்பாதிரிப்புலியூர் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் போலீசார் திருப்பாதிரிப்புலியூர், கூத்தப்பாக்கம் பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் கஞ்சா விற்ற கூத்தப்பாக்கத்தை சேர்ந்த நாக என்கிற நாகராஜ் (வயது 26), எம்.புதூர் ஹரி என்கிற அரவிந்த் (19), பாதிரிக்குப்பம் பாலா என்கிற பாலமுரளி (33), தாஸ் (24), திருப்பாதிரிப்புலியூர் முத்துக்குமரன் (27), முகமது இப்ராஹிம் (23), கே.என்.பேட்டை சிவபாலன், சுப்புராயலு நகர் ரத்தேஷ்கண்ணா (21) ஆகியோரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 1 கிலோ 600 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்