தமிழக செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் காமராஜர் பெயர் இடம்பெறும் வகையில் புதிய பெயர் பலகை வைக்க வேண்டும்

சென்னை விமான நிலையத்தில் காமராஜர் பெயர் இடம்பெறும் வகையில் புதிய பெயர் பலகை வைக்க வேண்டும் மத்திய மந்திரிக்கு பனங்காட்டு படை கட்சி கடிதம்.

சென்னை,

மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி ஹர்தீப்சிங் புரிக்கு, பனங்காட்டு படை கட்சி தலைவர் ராக்கெட் ராஜா எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னை உள்நாட்டு விமான நிலையத்துக்கு சூட்டப்பட்டிருந்த காமராஜர் பெயரை மத்திய அரசு அகற்றியுள்ளது. அனைவருக்கும் இலவச கல்வியை கொண்டு வந்ததோடு, இலவச மதிய உணவு திட்டத்தையும் முதல்-அமைச்சராக இருந்தபோது காமராஜர் அறிமுகப்படுத்தினார்.

மத்திய அரசின் தற்போதைய நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. காமராஜர் பெயரை நீக்கம் செய்திருப்பதை ஒட்டுமொத்த நாடார் சமுதாயமும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம்.

எனவே உள்நாட்டு விமான நிலையத்தில் காமராஜரின் பெயர் இடம் பெறும் வகையில் புதிய பெயர் பலகையை உடனடியாக வைப்பதோடு, காமராஜர் சிலையையும் நிறுவவேண்டும். இல்லையென்றால் தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்