தமிழக செய்திகள்

வியாபாரி வீட்டுக்குள் புகுந்த பாம்பு

நத்தத்தில் வியாபாரி வீட்டுக்குள் பாம்பு ஒன்று புகுந்தது.

நத்தம் அண்ணா நகரை சேர்ந்தவர் முகமது யூசுப். (வயது 45). இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இவரது வீட்டுக்குள் நல்லபாம்பு ஒன்று புகுந்தது. இதை பார்த்த அவர் அதிர்ச்சியடைந்தார். உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு நிலைய அலுவலர் லெட்சுமணன் தலைமையில் படை வீரர்கள் விரைந்து சென்றனர். பின்னர் 1 மணி நேரம் போராடி, வீட்டில் ஒரு அறையில் பதுங்கி இருந்த சுமார் 6 அடி நீளமுள்ள நல்ல பாம்பை பிடித்தனர். பின்பு அந்த பாம்பை நத்தம் வனத்துறையினரிடம் ஒப்படைக்கபட்டது. அவர்கள் நத்தம் அருகே உள்ள வனப்பகுதிக்குள் கொண்டு போய் விட்டனர். 

மராட்டிய துணை முதல் மந்திரியாக அஜித் பவார் மனைவி பதவியேற்பு

மத்திய பட்ஜெட்; முக்கிய சலுகைகள் அறிவிக்கப்படுமா?

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியர் கைது

லஞ்சம் வாங்கும்போது கைது... குழந்தை போல் அலறி ஆர்ப்பாட்டம் செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர்

காஷ்மீர் என்கவுன்ட்டர்: பாதுகாப்புப்படையினர் - பயங்கரவாதிகள் மோதல்