தமிழக செய்திகள்

அதிமுக - பாஜக கூட்டணி வலுவாக உள்ளது - எல்.முருகன் பேட்டி

அதிமுக-பாஜக கூட்டணியில் எந்த பிரச்சினையுமில்லை என்று இணை மந்திரி எல்.முருகன் கூறினார்.

சென்னை,

சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலில் தென்சென்னை உள்ளிட்ட 9 தொகுதிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். குமரி, கோவை, நீலகிரி, நெல்லை, வேலூர், ஈரோடு, சிவகங்கை, ராமநாதபுரம் தொகுதிகளில் அதிக கவனம் தேவை.

நிர்வாகிகள் கூட்டத்தில் கூட்டணி குறித்து அண்ணாமலை பேசியதில் எந்த சர்ச்சையும் இல்லை. அதிமுக-பாஜக கூட்டணியில் எந்த பிரச்சினையுமில்லை; கூட்டணி தொடர்கிறது. அதிமுக - பாஜக கூட்டணி வலுவாக உள்ளது.

தமிழகத்தில் பாஜக வளர்ச்சி அடைந்து வருகிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் கட்சி தலைவர்களாக இருந்தவர்கள் தங்களது பங்களிப்பை அளித்து கட்சியை சிறப்பாக நடத்தினர். இந்திய அளவில் 150 தொகுதிகளை கட்சி மேலிடம் அடையாளம் கண்டுள்ளது. அங்கு வெற்றி பெற அதிக கவனம் செலுத்தப்படுகிறது. கட்சியின் மேலிடத்தின் வழிகாட்டுதலின்படி எங்களது பணி தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மராட்டிய துணை முதல் மந்திரியாக அஜித் பவார் மனைவி பதவியேற்பு

மத்திய பட்ஜெட்; முக்கிய சலுகைகள் அறிவிக்கப்படுமா?

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியர் கைது

லஞ்சம் வாங்கும்போது கைது... குழந்தை போல் அலறி ஆர்ப்பாட்டம் செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர்

காஷ்மீர் என்கவுன்ட்டர்: பாதுகாப்புப்படையினர் - பயங்கரவாதிகள் மோதல்