தமிழக செய்திகள்

ஓசூர் அருகேகாரில் 207 கிலோ குட்கா கடத்திய 2 பேர் கைது

தினத்தந்தி

ஓசூர்:

ஓசூர் சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பட்டு மற்றும் போலீசார் சிப்காட் ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் 207 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான குட்கா, பான்பராக், பான்மசாலா உள்ளிட்டவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவற்றின் மதிப்பு ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்து 900 ஆகும். இதையடுத்து காரை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து காரில் வந்த 2 பேரிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் மதுரை வாய்க்கால்மேடு பகுதியை சேர்ந்த முனிராஜ் (வயது 28), மதுரை ஆரப்பாளையம் மேல் பொன்னகரம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (26) என்பது தெரியவந்தது.

பின்னர் அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் பெங்களூருவில் இருந்து மதுரைக்கு குட்கா கடத்த முயன்றது தெரியவந்தது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்