தமிழக செய்திகள்

பொள்ளாச்சி ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; தீவிர சோதனை

பொள்ளாச்சி ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு உள்ளது. #Bombthreat

தினத்தந்தி

பொள்ளாச்சி,

கோவையில் பொள்ளாச்சி ரெயில் நிலையத்திற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதனை அடுத்து பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

அங்கு வரும் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகள் ஆகியவை தீவிர சோதனை செய்யப்பட்டு பின்னர் அனுப்பி வைக்கப்படுகின்றனர். பொள்ளாச்சி ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

இலங்கையின் கொழும்பு நகரில் கடந்த ஞாயிற்று கிழமை ஈஸ்டர் பண்டிகையன்று அடுத்தடுத்து மூன்று கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் மூன்று 5 நட்சத்திர ஓட்டல்கள் மீது திடீரென குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதன்பின் அன்று மதியம் 2 மணியளவில் இரு தற்கொலை தாக்குதல்களும் நடத்தப்பட்டன.

இந்த தாக்குதல்களில் இதுவரை 359 பேர் உயிரிழந்து உள்ளனர். 500 பேர் வரை காயமடைந்தனர். இந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இதனை தொடர்ந்து தமிழகத்தின் கடலோர பகுதிகள் மற்றும் பிற பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பொள்ளாச்சி ரெயில் நிலையத்திற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளது பொதுமக்களிடையே பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்