காட்பாடி
சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் நாளை மறுநாள் முதல் ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி வரை நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு வேலூர் மாவட்டம் காட்பாடியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் அரசு ஊழியர்களுக்கும் இடையேயான செஸ் போட்டிகள் இன்று நடந்தது.
இதில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஒலிம்பியாட் ஜோதியை தொடங்கிவைத்து, செஸ் போட்டியை பார்வையிட்டார்.
பின்னர் பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி மாலையில் நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கேடயங்கள் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
விழாவில் பா.கார்த்திகேயன் எம்.எல்.ஏ., வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார்,
காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன், மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, மாநகராட்சி கவுன்சிலர் விமலா சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.