சென்னை
சென்னை வீனஸ் காலனி இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் இன்று ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், கே.பி.முனுசாமி,மைத்ரேயன், மனோஜ் பாண்டியன்,செம்மலை, பொன்னையன்மைதேரய்ம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக பேட்டி அளீத்த பொன்னையன் கூறியதாவது:-
இரு அணிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெறும்.பேச்சுவார்த்தைக்கான தாமதம் இயல்பான ஒன்று தான்.சேலத்தில் செம்மலை தெரிவித்த கருத்து அந்த மாவட்டத்திற்கானது மட்டும் தான். இவ்வாறு அவர் கூறினார்.
மைத்ரேயன் எம்.பி.கூறும் போது எங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் பேச்சுவார்த்தைக்கு தயார் என கூறினார்.
மாஃபா பாண்டியராஜன் கூறும்போது கட்சியை விட்டு சசிகலா, தினகரனை நீக்கினால் பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார் என கூறினார்.