தமிழக செய்திகள்

காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

பொள்ளாச்சியில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

பொள்ளாச்சி

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியாகாந்தி, ராகுல்காந்தியை மத்திய அரசு பழிவாங்கும் நோக்கில் நடத்தப்படும் அமலாக்கத்துறை விசாரணை கண்டித்து பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நேற்று கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியகிரக அறவழிப் போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் பகவதி தலைமை தாங்கினார். இதில் நகர தலைவர் செந்தில்குமார், மகிளா காங்கிரஸ் துணை தலைவர் கவிதா, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதயகுமார், முன்னாள் மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட துணை தலைவர் சிற்பி ஜெகதீசன் மற்றும் வட்டார தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT