தமிழக செய்திகள்

சிக்கன் கடை நடத்த உரிமம் கேட்டு விண்ணப்பித்தவாலிபரிடம் ஆன்லைனில் ரூ.8½ லட்சம் மோசடிசைபர் கிரைம் போலீசார் விசாரணை

பிரபல நிறுவனத்தின் பெயரில் சிக்கன் கடை நடத்த உரிமம் கேட்டு விண்ணப்பித்த வாலிபரிடம் ஆன்லைனில் ரூ.8½ லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி

பிரபல நிறுவனத்தின் பெயரில் சிக்கன் கடை நடத்த உரிமம் கேட்டு விண்ணப்பித்த வாலிபரிடம் ஆன்லைனில் ரூ.8 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிக்கன் கடை

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள காரைக்குறிச்சி புதூரை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 32). லாரி தொழில் செய்து வருகிறார். இவர் பிரபல சிக்கன் நிறுவனம் பெயரில் கடை நடத்த உரிமம் கேட்டு ஆன்லைனில் சில விவரங்களை தேடி உள்ளார்.

இதை தெரிந்து கொண்ட மர்ம நபர் ராஜேசை செல்போனில் தொடர்பு கொண்டு உள்ளார். அப்போது உரிமம் வாங்கி தருவதாக கூறி முதல்கட்டமாக ராஜேசிடம் ரூ.1 லட்சம் வங்கி கணக்கு மூலம் வாங்கி உள்ளார். பின்னர் உங்களுக்கு ஆர்டர் கிடைத்து விட்டது என கூறி மேலும் ரூ.7 லட்சம் வாங்கி உள்ளார்.

ரூ.8 லட்சம் மோசடி

மொத்தமாக ரூ.8 லட்சத்தை மர்ம நபர் கொடுத்த வங்கி கணக்கிற்கு அனுப்பிய ராஜேஷ் தனக்கு உரிமம் வரவில்லையே என யோசனையுடன் இருந்து உள்ளார். அப்போது அந்த மர்ம நபர் உரிமத்தின் நகலை பெற மேலும் ரூ.15 லட்சம் தர வேண்டும் என கேட்டு உள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த ராஜேஷ் குறிப்பிட்ட அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டபோது தான் ஏமாற்றப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து அவர் நாமக்கல் சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்