மதுரை,
தேவர் ஜெயந்தியையொட்டி, நாளை காலை 6 மணி முதல் இரவு 10.30 மணி வரை மதுரை நகருக்குள் கனரக வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது.
தேவர் சிலை அமைந்துள்ள கோரிப்பாளையம் பகுதிக்குள் விழாவிற்கு வரும் வாகனங்களை தவிற பிற வாகனங்கள் வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், பசும்பொன் செல்லக்கூடிய பிற மாவட்ட வாகனங்கள், மதுரை நகருக்குள் வராமல் சுற்று சாலை வழியாக செல்லவேண்டும் என்று மதுரை மாநகர காவல்துறை தெரிவித்து உள்ளது.