தமிழக செய்திகள்

பேனர் கட்டும்போது மின்சாரம் தாக்கி திமுக பிரமுகர் பலி

பேனர் கட்டும்போது மின்சாரம் தாக்கியதில் திமுக பிரமுகர் பலியானார்.

தினத்தந்தி

வேலூர்,

வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த வடுகந்தாங்கல் பகுதியில், திமுக கட்சி சார்பில் கட்சி நிகழ்ச்சி ஒன்று இன்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் பங்கேற்க இருந்த நிலையில், அமைச்சரை வரவேற்பதற்காக திமுக நிர்வாகிகள் பேனர் கட்டும்பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சாலையோரம் இருந்த மின்கம்பத்திலிருந்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் திமுக பிரமுகருமான மார்கபந்து மற்றும் அவருக்கு உதவியாக இருந்த ஒருவர் மேலும் மின்சாரம் பாய்ந்தது. இதையடுத்து இருவரும் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மார்கபந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பாக கே வி குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கப்பட்ட மற்றொரு நபருக்கு வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்