சென்னை,
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்வையையே சந்தித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி நேற்றைய விலையிலிருந்து 15 காசுகள் அதிகரித்து டீசல் லிட்டருக்கு 73.69 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல் விலை 13 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.81.22 ரூபாயாக உள்ளது. இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை தமிழக காங்கிரஸ் நிர்வாகி ஜோதிமணி தனது டிவிட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கரூரில் டீசல் விலை 73.89 ,பெட்ரோல் 81.42 என பதிவிட்டுள்ள அவர், அச்சே தீன் ஆனே வாலா நஹி ஹே!
அச்சே தீன் யானை விலை ஹே! என பதிவிட்டுள்ளார்.
அதாவது நல்ல நாள் வரவில்லை. விலை மட்டும் யானை விலை உள்ளது என விமர்சித்துள்ளார்.