தமிழக செய்திகள்

டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு விரைவில் நல்ல செய்தி வரும்- முதல்வர் பழனிசாமி

டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு விரைவில் நல்ல செய்தி வரும் என சட்டசபையில் முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.

சென்னை

தமிழக சட்டப்பேரவையில் வேளாண் மண்டல அறிவிப்பை சுட்டிக்காட்டி பேசிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், ஹைட்ரேகார்பன் திட்டங்களின் நிலை என்ன? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவிரி டெல்டா பகுதியில் மண்டலம் அறிவிப்பு தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து வருவதாக கூறினார்.

டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு விரைவில் நல்ல செய்தி வரும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். காவிரி டெல்டா மண்டலம் தொடர்பான பணிகள் தெடங்கப்பட்டிருப்பதாகவும் முதலமைச்சர் பழனிசாமி விளக்கம் அளித்தார்.

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு