முத்துப்பேட்டை புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மாணவர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். மாவட்ட சித்த மருத்துவ அலுவலரின் அறிவுரைப்படி டாக்டர்கள் ஹரிகரன், பிரியதர்ஷினி, பயிற்சியாளர்கள் வினோத், பத்மஜோதி ஆகியோர் யோகா செய்வதனால் ஏற்படும் உடல்நல, மன நல நன்மைகள் பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்து, யோகா பயிற்சி அளித்தனர். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் நித்தையன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.