தமிழக செய்திகள்

புதிய பேருந்து நிலையம் திறப்பு: தமிழக மக்களுக்கு தை திங்கள் பரிசு - அமைச்சர் சேகர் பாபு

புதிய ரெயில் நிலையம் தொடங்குவதற்கான பணியும் தொடங்கப்பட உள்ளது என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

தினத்தந்தி

சென்னை,

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார். அத்துடன், பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகளை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

இந்த நிலையில் இது தொடர்பாக பேசிய அமைச்சர் சேகர் பாபு ,

புதிய பேருந்து நிலையம் திறப்பு, தமிழக மக்களுக்கு தை திங்கள் பரிசு. நிறைவேற்றப்படாமல் இருந்த 70% பணிகளை 28 மாதங்களில் முடித்துள்ளோம். ரூ.90 கோடி அளவுக்கு கூடுதல் நிதி ஒதுக்கி பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

ரூ.13 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. தினந்தோறும் 2,130 பேருந்துகளை இயக்கும் அளவுக்கு வசதி உள்ளது. . நாள்தோறும் 1 லட்சம் பயணிகள் பயன்படுத்தலாம் . புதிய ரெயில் நிலையம் தொடங்குவதற்கான பணியும் தொடங்கப்பட உள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்