தமிழக செய்திகள்

வரத்து அதிகரிப்பால் வாழைத்தார் விலை உயர்வு

வரத்து அதிகரிப்பால் வாழைத்தார் விலை உயர்ந்துள்ளது.

வேலாயுதம்பாளையம், 

வேலாயுதம்பாளையம், நஞ்சைபுகழூர், பாலத்துறை, திருகாடுதுறை, நொய்யல்தளவாப்பாளையம், தோட்டக்குறிச்சி, அய்யம்பாளையம், மலையம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் ஏராளமானோர் தங்களது வயலில்களில் வாழைக்கன்றுகள் பயிர் செய்தனர். பின்னர் வாழைத்தார்கள் விளைந்ததும் அதனை பறித்து பரமத்தி வேலூர் பகுதியில் உள்ள ஏலமார்க்கெட்டுக்கு விற்பனைக்காக சல்கின்றனர். கடந்தவாரம் பூவன் வாழைத்தார் ஒன்று ரூ.400-க்கும், கற்பூரவள்ளி, ரஸ்தாளி, மொத்தன் வாழைத்தார்கள் ரூ.300-க்கும் விற்பனையானது. தற்போது பூவன் வாழைத்தார் ரூ.550-க்கும், கற்பூரவள்ளி, ரஸ்தாளி, மொத்தன் வாழைத்தார் ரூ.420-க்கு விற்பனையானது. வரத்து அதிகரிப்பால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் வாழை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு